மாணவியின் தலையில் அடித்த ஆசிரியை.. மண்டை ஓட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அதிர்ச்சி..!

Siva

புதன், 17 செப்டம்பர் 2025 (20:59 IST)
ஆந்திராவில் உள்ள பள்ளியில், ஆறாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு மண்டை ஓட்டில் எலும்பு முறிவு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்விகா நாகஸ்ரீ என்ற அந்த மாணவியை, அவரது இந்தி ஆசிரியர் சலீமா பாஷா, ஸ்டீல் சாப்பாட்டு பெட்டி இருந்த பையால் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது.
 
வகுப்பில் மாணவி செய்த குறும்புகளால் ஆத்திரமடைந்த ஆசிரியர் அவரை தாக்கியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில், அதே பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரியும் மாணவியின் தாயார் காயத்தின் தீவிரத்தை உணராமல் இருந்துள்ளார்.
 
பின்னர், மாணவிக்கு கடும் தலைவலி மற்றும் மயக்கம் ஏற்பட்டதால், அவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு எடுக்கப்பட்ட சி.டி. ஸ்கேன் பரிசோதனையில், அவரது மண்டை ஓட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டது உறுதியானது.
 
இதையடுத்து, மாணவியின் குடும்பத்தினர் ஆசிரியர் மற்றும் பள்ளி முதல்வர் மீது புகார் அளித்துள்ளனர். காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்