'தமிழக வெற்றி கழகம்' கட்சியின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் இரண்டு கோடி உறுப்பினர்களைச் சேர்க்கும் இலக்கை அறிவித்துள்ளார். இந்த இலக்கை எட்டும் விதமாக, தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று உறுப்பினர் சேர்க்கை பணிகளை தீவிரப்படுத்துமாறு விஜய் தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வின் ஆட்சிக் குறைகளை மக்களிடம் எடுத்துரைக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.