புதின் பதவி விலகினாலும் கிங்காக இருப்பாரா? மீண்டும் வளைக்கப்படும் சட்டம்!

வியாழன், 19 நவம்பர் 2020 (17:06 IST)
ரஷ்ய அதிபர் புதினுக்காக மீண்டும் அந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் மிகப்பெரிய திருத்தம் ஒன்று செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களில் ஒருவராக இருந்து வருகிறார் ரஷ்ய அதிபர் புதின். ஆனால் தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஜனநாயகக் குரலை நெறிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் புடின் அதிபர் பதவியில் இருந்து அடுத்த ஆண்டு விலகப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவருக்கு மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும் பார்க்கின்சன் நோய் இருப்பதாகவும் அதனால் அவர் இப்போது அதிக அளவிலான வலியை எதிர்கொண்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக குடும்பத்தினரின் வற்புறுத்தல் காரணமாக புதின் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லபப்டுகிறது.

இந்நிலையில் இப்போது ரஷ்யா அரசியலமைப்பு சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வரப்பட உள்ளதாம், அதன்படி அதிபர் பதவியில் இருந்து பதவி விலகிய முன்னாள் அதிபர் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது எந்த ஒரு வழக்கோ அல்லது அவர்களின் சொத்து பறிமுதலோ செய்யப்பட முடியாதாம். தேச துரோக வழக்குகளில் மட்டுமே வழக்குப் பதிவு செய்ய முடியும் என இந்த சட்ட மசோதா கூறுகிறதாம். இந்த திருத்தத்துக்கு நாடாளுமன்றத்தின் கீழவை ஒப்புதல் அளித்துவிட்டதாக சொல்லப்படும் மேலளைவியிலும் ஒப்புதல் பெற்றால் புதின் கையெழுத்திடுவார் எனத் தெரிகிறது.

தனது ஓய்வுக்குப் பிறகு தனக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதறகாகவே இந்த சட்டத்திருத்தத்தை புதின் கொண்டுவருவதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்