மாடல் அழகி மகளை சூட்கேசில் வைத்து கடலில் தூக்கி எறிந்த தாய். அதிர்ச்சி தகவல்

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2017 (23:58 IST)
உலகின் பல நாடுகளில் பசியால் பல ஆயிரக்கணக்கான உயிர்கள் நாள்தோறும் மடிந்து கொண்டிருக்கும் நிலையில் இத்தாலி நாட்டை சேர்ந்த கேதரினா லக்டி என்ற மாடல் அழகிக்கு நாட்கணக்கில் பசியே இல்லாத நோய் இருந்ததாம். இதனால் பல நாட்களாக சாப்பிடாமல் இருந்த அவர் திடீரென சமீபத்தில் மரணம் அடைந்தார்.




 

மகளின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்த தாய், இறந்த மகளின் உடலை ஒரு சூட்கேசில் வைத்து கடலில் வீசி எரிந்துவிட்டு தனது சொந்த நாடான ரஷ்யாவுக்கு சென்றுவிட்டார்.

கடலில் வீசப்பட்ட சூட்கேஸ் மீனவர்களிடம் சிக்க, அதை அவர்கள் காவல்துறையினர்களிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் இதுகுறித்து கேத்ரினாவின் தாயிடம் விசாரணை செய்தனர். முதலில் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு பின்னர் அழகியின் மரணத்திற்கு உண்மை காரணம் தெரிந்தவுடன் அவரது தாயாரை இந்த வழக்கில் இருந்து விடுவித்து அவரை மீண்டும் ரஷ்யாவுக்கு அனுப்பி வைத்தனர்.
 
அடுத்த கட்டுரையில்