முதல்முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை.. ரஷ்யா - உக்ரைன் போர் தீவிரமடைகிறதா?

Mahendran
வியாழன், 21 நவம்பர் 2024 (16:29 IST)
கடந்த மூன்று ஆண்டுகளாக ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் இடையே போர் நடந்து வரும் நிலையில், முதல் முறையாக ரஷ்யா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையால் தாக்கியுள்ளதால் போர் தீவிரம் அடைவதாக கூறப்படுகிறது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்கா மற்றும் பிரிட்டன் வழங்கிய சக்தி வாய்ந்த ஏவுகணைகளை உக்ரைன் ரஷ்யா மீது தாக்குதல் நடத்த தொடங்கியதை தொடர்ந்து, ரஷ்யாவும் பதிலடியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை இந்த போரில் இந்த வகை ஏவுகணை பயன்படுத்தப்படாத நிலையில், முதல் முறையாக ரஷ்யா இந்த ஏவுகணையை ஏவியதால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சேத விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்றும், இன்னும் சில மணி நேரங்களில் அதுகுறித்த தகவல் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்