ஐரோப்பியாவுக்கு ரஷியா மிகப்பெரிய அச்சுறுத்தல்- நார்வே

Webdunia
திங்கள், 13 பிப்ரவரி 2023 (22:12 IST)
உக்ரைன் – ரஷியா இடையே போர் 1 ஆண்டாக தொடர்ந்து போர் நடந்து வரும் நிலையில்,  ஐரோப்பியாவுக்கு ரஷியா அச்சுறுத்தலாக உள்ளதாக நார்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷிய ராணுவம் போரிட்டு 1 ஆண்டுகள் நிறைவடையவுள்ளது. உக்ரைனுக்கு ஆதரவராக மேற்கத்திய நாடுகளும், அமெரிக்காவும் தொடர்ந்து நிதி மற்றும் ஆயுத  உதவிகள் செய்து வருகிறது.

இந்த நிலையில், நார்வே நாட்டில் உள் நாடு வெளி நாட்டு புலனாய்வு அமைப்புகள் ) தேசிய பாதுகாப்பு ஆணையம் ஆண்டு மதிப்பீடுகள் அளித்துள்ளது.

இதையடுத்து, ‘’நார்வே ராணுவ அமைச்சர் ஜோர்ன் அரில்ட் கிராம்,  நார்வே மற்றும் ஐரோப்பாவுக்கு ரஷியா நாடு அச்சுறுத்தும் விதமாக உள்ளது. இந்த நாடு மேற்கத்திய நாடுகளுக்கும் நீண்ட காலமாக நீடிக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

இவரது கருத்து உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்