ரஷ்யாவில் இருந்து இறக்குமதியாகும் பொருளுக்கு 200% வரி.. அமெரிக்கா அறிவிப்பு!
செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (15:17 IST)
உக்ரைன் போர் விவகாரம் காரணமாக ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையிலான நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி ஆகும் முக்கிய பொருளுக்கு 200 சதவீதம் வரி விதிக்க அமெரிக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவுக்கு அதிகம் இறக்குமதி செய்யப்படும் பொருள்களில் ஒன்று அலுமினியம். இந்த நிலையில் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியத்திற்கு 200% வரிவிதிக்க அமெரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்க சந்தையில் ரஷ்யா அதிகபட்ச அலுமினியத்தை இறக்குமதி செய்வதால் அமெரிக்க நிறுவனம் பாதிக்கப்படுவதாகவும் இதன் காரணமாகவே இந்த வரி விதிப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டும் என்று உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்பாக அந்நாட்டின் மீது அழுத்தத்தை தருவதற்காகவும் இந்த வரி விதிப்பு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.