ரஷ்யாவை விமர்சித்து வரும் பதிவுகள்! – சமூக வலைதளங்கள் முடக்கம்!

வெள்ளி, 4 மார்ச் 2022 (12:45 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்திருப்பது குறித்து பலரும் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் சமூக வலைதளங்களை ரஷ்யா முடக்கியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் கடந்த 9 நாட்களில் இரு தரப்பிலும் பல வீரர்கள் உயிரிழந்துள்ளனர். உக்ரைனில் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ள நிலையில், ரஷ்ய தாக்குதலால் நகரங்கள் சின்னாபின்னமானதால் அகதிகளாகும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் ரஷ்யாவின் இந்த போர் குறித்து பலரும் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதுதொடர்பாக ரஷ்யாவுக்கு எதிராக ஹேஷ்டேகுகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் ரஷ்யாவில் பேஸ்புக், யூட்யூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் பலவற்றை ரஷ்யா முடக்கியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்