7 மாதத்தில் 3 பிரதமர்கள்: என்ன நடக்குது ரொமானியாவில்?

Webdunia
வெள்ளி, 19 ஜனவரி 2018 (05:00 IST)
ரொமானியா நாட்டில் கடந்த சில மாதங்களாக அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத காரணத்தால் ஏழு மாதங்களில் மூன்று பிரதமர்கள் மாறிவிட்டனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற முடியாமல் போன ரொமானிய பிரதமர் சோரின் கிரிண்டெனு பதவியிழந்த நிலையில் அவருக்கு பதிலாக மிஹெய் டுடோஸ் என்பவர் பிரதமராக பதவியேற்றார்.

இவரது ஆட்சியிலும் குழப்பங்கள் நீடித்து வந்த நிலையில் நேற்று திடீரென இவர் பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். தற்போது ரொமானிய பிரதமராக வியோரிகா டான்சிலா என்பவர் பிரதமராக பதவியேற்றுள்ளார். இவர் ரொமானியா நாட்டின் முதல் பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது. இவராவது ரொமானியாவுக்கு நிலையான ஆட்சியை தர வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்