செவ்வாய் கிரகத்தில் பாறைகள்: நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

வெள்ளி, 17 டிசம்பர் 2021 (11:49 IST)
செவ்வாய் கிரகத்தில் பாறைகள்: நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
செவ்வாய் கிரகத்தில் பாறைகள் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
செவ்வாய் கிரகம் குறித்த ஆராய்ச்சியை கடந்த பல ஆண்டுகளாக நாசா செய்து வருகிறது என்பதும் இது குறித்து பல விண்கலங்கள் அனுப்பப்பட்டு, அந்த விண்கலங்களில் இருந்து பெறப்படும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய விண்கலம் மூலம் துல்லியமான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தில் இருந்து செவ்வாய் கிரகத்தில் பூமியில் இருப்பது போன்ற கடினமான பாறைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பாறைகள் எத்தகைய தன்மை கொண்டவை என்பது குறித்து ஆராயும் அடுத்த கட்ட பணியில் நாசா விஞ்ஞானிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்