சிவனை வழிபட ஏற்ற பிரதோஷ வேளை ஏன் தெரியுமா...?

பிரதோஷ காலங்களில் ஈசனின் கருவறை கோமுகம் அருட்சக்தியோடு துலங்குவதால் அதை பக்தியுடன் வணங்கவேண்டும். 


பிரதோஷ வேளையில் ஈசன் ஆடும் தாண்டவத்திற்கு அம்பிகை பாட, நான் முகன் தாளம் போட, சரஸ்வதி வீணைமீட்ட, நரநாராயணர்கள் மத்தளம் இசைக்க, இந்திரன் புல்லாங்குழல் வாசிக்க, லட்சுமி கஞ்சிரா இசைக்க, ஏழு கோடி இசைக்கருவிகளை கந்தர்வர்கள் மீட்டுவதாக ஐதீகம்.
 
ஆலகால விஷத்தை கண்டு பயந்த தேவர்கள் முன்னும் பின்னுமாக ஓடியதை நினைவுறுத்தும் வகையில் பிரதோஷ வேளையில் சோமசூக்தப் பிர தட்சிணம் செய்யப்படுகிறது. அது அனந்தகோடி பலனைத் தரும் என்பர்.
 
ஈசன் பாற்கடலிலிருந்து வெளிவந்த ஆல. கால விஷத்தை உண்டபோது அதன் உஷ்ணம் அவரைத் தாக்காமலிருக்க அசுவினி தேவர்கள் மயில் பீலி ஆலவட்டத்தை வீசினர். அதன்நினைவாக இன்றும் பிரதோஷ வேளையில் பல ஆலயங்களில் ஈசனுக்கு மயில் பீலி விசிறிகளால் வீசுகின்றனர்.
 
சிவனை வழிபட ஏற்ற காலம் சாயரட்சை. அதிலும் சிறந்தது சோமவாரம். அதனினும் சிறந்தது மாத சிவாரத்திரி. அதனினும் சிறந்தது பிரதோஷம். பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள். ஏழ்மை ஒழியவும், நோய் தீரவும், கெட்ட நோய்களின் துயர் மடியவும் பிரதோஷ வழிபாடு சிறந்ததாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்