நிவாரண பொருட்கள் முடக்கம்: பரிதவிக்கும் 4 லட்சம் மக்கள்...

Webdunia
சனி, 3 மார்ச் 2018 (10:27 IST)
சிரியாவின் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து கிளர்ச்சியாளர்கள் போர் தொடுத்துள்ளனர். சிரிய அதிபருக்கு ஆதரவாக ரஷ்யாவும், கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. 

 
 
சமீபத்தில் நடத்திய தாக்குதலில் மக்கள் பலர் உயிரழிந்தனர். இதுவரை 800-க்கும் அதிகமானோர் மரணமடைந்தனர் அதில் பெண்களும், குழந்தைகளும் அடக்கம். 
 
தற்போது நிறுத்தி வைக்கப்பட்ட உள்ள நிலையில், இதற்கு முன்னர் நடத்திய போரின் போது மக்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்கு நிவாரணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 
 
அதாவது, நிவாரணம் பொருட்கள் வழங்க வரும் லாரிகளை முடக்கி சிரிய அரசு மக்களுக்கு உதவ முன்வராமல் தடுத்து வருகிறது. இதை தவிர பெண்கள் உடலுறவு கொண்டால்தான் சாப்பாடு வழங்கப்படும் என்பது போன்ற இன்னல்களும் அரங்கேறுகிறது. இதனால் மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்