உக்ரைனுக்கு நிதி உதவி செய்த இங்கிலாந்து ராணி

Webdunia
வெள்ளி, 4 மார்ச் 2022 (16:22 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் கடந்த 9 நாட்களில் இரு தரப்பிலும் பல வீரர்கள் உயிரிழந்துள்ளனர். உக்ரைனில் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ள நிலையில், ரஷ்ய தாக்குதலால் நகரங்கள் சின்னாபின்னமானதால் அகதிகளாகும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

ரஷ்ய வீரர்களை எதிர்த்து உக்ரைன் வீரர்களும் பதிலடி கொடுத்து வருவதாக கூறப்பட்ட நிலையில் ரஷ்ய வீரர்கள் 9111 பேர்களை கொன்று விட்டோம் என உக்ரைன்  அரசு தெரிவித்துள்ளது

மேலும் ரஷ்ய படைகளின் 251 டாங்கிகள், 33 போர் விமானம், 37 ஹெலிகாப்டர், 217 பீரங்கிகள், 939 பாதுகாப்பு கவச வாகனங்களை அழித்துள்ளதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உக்ரைன் நாட்டிற்கு ஏற்கனவே நேட்டோ நாடுகளும் மேற்கத்திய  நாடுகளும் உதவிக் கரம்  நீட்டி நிதியுதவி செய்து வரும் நிலையில், தற்போது இங்கிலாந்து நாட்டு ராணி எலிசபெத் மிகப்பெரிய அளவில் நிதி உதவி செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

ஆனால், அவர் எவ்வளவு நிதி உதவி கொடுத்தார் என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை; இந்த தகவலை உலகில் முன்னணி செய்தி  நிறுவனம் வெளியிட்டுள்ளது.  இதனால் எலிசபெத் ராணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்