கத்தார் நாட்டை பொருளாதார ரீதியாக வளைகுடா நாடுகள் ஒதுக்கி வைத்துள்ளது. இதனால் கத்தாருக்கு பெரும் பெருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பயங்கரவாதத்திற்கு கத்தார் உதவி புரிவதாக சவுதி அரேபியா, எமிரேட்ஸ், பஹ்ரேன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் கத்தாருடனான விமானம் மற்றும் கடல்வழித் தொடர்பை புறக்கணித்தது.
இதன் காரணமாக கட்டார் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் பொருளாதார ரீதியாக வளைகுடா நாடுகள் கத்தாரை தனிமைப்படுத்தியதற்கு எதிராக வளைகுடாவின் நான்கு நாடுகளிடம் இழப்பீடு கோரவுள்ளதாக கத்தார் அரசு அறிவித்துள்ளது.
இதனால் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய நெருக்கடியில் வளைகுடா நாடுகள் உள்ளன.