இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (19:53 IST)
இந்தோனேஷியாவில் உள்ள மொலுக்கா பகுதியில்  இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.

சில நாட்களுக்கு முன் துருக்கி மற்றும் சிரியாவில் சக்திவாய்ந்த  நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், அடுக்குமாடி குடியிருப்புகள் சரிந்து விழுந்தன. இந்தக் கட்டிய இடுபாடுகளில் சிக்கி பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

இதேபோல் தைவான், இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில்     நில நடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில், இந்தோனேஷியாவில் இன்று மொலுக்கா கடல் பகுதியில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகப் பதிவாகியுள்ளது. நில நடுக்கத்தால்  சேதம் ஏதுவும் ஏற்படவில்லை எனவும்,  நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.

ஆனால், சமீக காலமாக இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து நில நடுக்கம் ஏற்பட்டு வருவது அங்குள்ள மக்களிடையே அச்சத்தை  ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்