போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி! உடல்நலம் குறித்த அறிக்கை..!

வியாழன், 30 மார்ச் 2023 (08:37 IST)
போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் உலக கிறிஸ்துவ மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
வாடிகானில் வாழ்ந்து வரும் போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் இருப்பதாகவும் அதற்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிகிறது. 
 
இந்த நிலையில் ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சுவாச தொற்றுநோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என வாடிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 
 
இன்னும் சில நாட்களுக்கு பிரான்சிஸ் பிரான்சிஸ் ரோமில் உள்ள மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என்றும் அதன் பிறகு அவர் சில நாட்கள் ஓய்வுட் எடுப்பார் என்று வாடிகான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்