சீனாவில் இருந்து கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்குக் கொரோனா பரவியது. இது அடுத்தடுத்து, 2-வது,3-வது, 4-வது அலையாகவும், உருமாறிய வைரஸாகவும் மக்களிடையே பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
சமீபகாலமாய குறைந்திருந்த கொரொனா தொற்று இந்தியாவில் மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
இதுகுறித்து அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், கடந்த 7 நாளில் மட்டும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 78% அதிகரித்துள்ளது.
குறிப்பாக அரியானா, உத்தரபிரதேசம், டெல்லி, குஜராத் கோவா,இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரொனா பரவல் அதிகரித்துள்ளது. எனவே வரும் ஏப்ரல் மாதம்10, 11 ஆகிய தேதிகளில் நாடு முழுவதிலுள்ள மருத்துவமனைகளில் கொரொனா தடுப்பு ஒத்திகை நடத்த சுகாதார அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன்களை அறிவுறுத்தியுள்ளது.