இங்கிலாந்து மன்னருக்கு புற்றுநோய்.. விரைந்து குணமாக பிரதமர் மோடி பிரார்த்தனை..!

Siva
செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (11:30 IST)
இங்கிலாந்து மன்னருக்கு புற்றுநோய் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் விரைவில் குணமாக பிரார்த்தனை செய்வதாக பிரதமர் மோடி தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார் 
 
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் அவர்களுக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் தகுந்த  சிகிச்சையை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர் என்றும் பக்கிங்காம் அரண்மனை செய்தி வெளியிட்டு இருந்தது. 
 
இந்த நிலையில் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் விரைவில் குணமாக வேண்டும் என உலகம் முழுவதும் பிரார்த்தனை செய்யப்பட்டு வரும் நிலையில் இந்தியர்கள் செய்யும் பிரார்த்தனையில் நானும் கலந்து கொள்கிறேன், இங்கிலாந்து மன்னர் சார்லஸ் அவர்கள் விரைவில் குணமாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன் என்று பிரதமர் மோடி தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார் 
 
பிரதமர் மோடியின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்