பிரான்சில் முகமது நபியை சர்ச்சைக்குரிய வகையில் சித்தரித்த கார்ட்டூனை வைத்து பாடம் நடத்தியதாக ஆசிரியர் ஒருவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சில நாட்கள் முன்னதாக பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பத்தின் போது ஆசிரியரை கொன்ற நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில் நபிகளை தவறாக சித்தரித்ததற்கு பிரான்ஸ் மீது ஈரான், துருக்கு உள்ளிட்ட நாடுகளில் இருந்து எதிர்ப்புகள் வலுத்துள்ளன.