ஊழலுக்கு எதிராக எந்தவிதமான சமரசமும் இல்லை: பிரதமர் மோடி

செவ்வாய், 27 அக்டோபர் 2020 (17:54 IST)
ஊழலுக்கு எதிராக எந்தவிதமான சமரசமும் இன்றி இந்த அரசு முன்னேறிக் கொண்டிருக்கிறது என பிரதமர் மோடி லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு குறித்த தேசிய மாநாடு ஒன்றில் கலந்து கொண்டபோது தெரிவித்தார்
 
ஆண்டுதோறும் அக். 27 முதல் நவ. 2 வரை கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து மத்திய புலனாய்வுப் பிரிவு ஏற்பாட்டில் லஞ்ச ஒழிப்பு - ஊழல் தடுப்பு குறித்த தேசிய மாநாடு காணொலி மூலம் நடைபெறுகிறது
 
விழிப்பான இந்தியா - வளமான இந்தியா' என்ற காணொலி நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பிரதமர் பேசியதாவது: ஊழலுக்கு எதிராக முறையான தணிக்கை பயிற்சி பரிசோதனை மற்றும் திறன் போன்றவற்றை அமைக்க வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது. ஊழலுக்கு எதிராக எந்தவிதமான சமரசமும் இன்றி இந்த அரசு முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஊழல் அந்நிய செலாவணி முறைகேடு பொருளாதார குற்றங்கள் ஆகும். போதைப்பொருள் கடத்தல் அமைப்பு இவை எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது.
 
நமது நிர்வாக நடைமுறை வெளிப்படையாகவும் மக்களுக்குப் பதிலளிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். ஊழல் என்பது வளர்ச்சிக்கு தடையாக இருப்பது மட்டுமின்றி சமூக சமநிலையையும் வெகுவாக பாதிக்கிறது’ என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்