ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட ஜிம்பாப்வே வீரர்களுக்கு சிறை

Webdunia
திங்கள், 29 ஆகஸ்ட் 2016 (17:59 IST)
ஒலிம்பிக்கில் ஜிம்பாப்வே பதக்கம் வெல்லாத காரணத்தினால், போட்டியில் கலந்து கொண்ட அனைத்து வீரர்களையும் கைது செய்து சிறையில் அடைக்க அதிபர் உத்தரவிட்டுள்தாக தகவல்கள் வெளியாகின. அதற்கு மறுப்பும் தெரிவித்துள்ளனர்.


 

 
நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வே சார்பில் 31 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஜிம்பாப்வே சார்பில் ஒரு பதக்கம் கூட வெல்லவில்லை. 
 
இந்த நிலையில் ஜிப்பாப்வே அதிபர் ரோபர்ட் முகாபே,  ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட 31 வீரர் வீராங்கனைகளையும் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
 
இவர்கள் நாட்டின் பணத்தை வீணாக்கி விட்டனர். இவர்கள் எலிகள் அவர்களை நாம் விளையாட்டு வீரர்கள் என அழைக்கிறோம். அவர்கள் நாட்டிற்காக எந்த தியாகமும் செய்ய தயாராக இல்லை.இவர்களால் செம்பு, பித்தளை பதக்கங்கள் கூட வெல்ல முடியவில்லை. ஆனால் நமது பக்கத்து நாடு போட்ஸ்வானாவால் முடிந்து உள்ளது. இவர்கள் அங்கு சென்று நமது பணத்தை வீணாக்கி வந்து உள்ளனர், என அதிபர் கூறியுள்ளார்.

இதுபோன்று செய்தி வதந்தி என்று அந்நாட்டு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்