பிரபல பிளேபாய் இதழின் நிறுவனர் காலமானார்

வியாழன், 28 செப்டம்பர் 2017 (13:20 IST)
பிரபல பிளேபாய் இதழின் நிறுவனர் ஹக் ஹெப்னர்(91) நேற்று இரவு  காலமானார்.


 

 
ஹக் ஹெப்னர் 1953ஆம் ஆண்டு தனது சொந்த முயற்சியில் பிளேபாய் என்ற இதழை வெளியிட்டார். 60 ஆண்டுகள் கடந்த இந்த பிளேபாய் இதழுக்கு இன்றும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. பிளேபாய் அட்டை படத்தில் இடம்பிடிக்க ஏராளமானோர் போட்டி போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 
இரண்டாம் உலகப் போர் நடைபெற்றபோது 2 ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரிந்தார். பின் 1953ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பிளேபாய் இதழை வெளியிட்டார். இந்த இதழ் பெண்களின் நிர்வாண புகைப்படம் இடம்பெற்றதாலே புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது. 
 
ஹக் ஹெப்னர் தனது 91 வயதில் காலமானார் என்ற செய்தியை பிளேபாய் நிறுவனம் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்