35-70 மில்லியன் பங்குகளை விற்க முடிவு: ஃபேஸ்புக் மார்க் அதிரடி

புதன், 27 செப்டம்பர் 2017 (22:41 IST)
உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் நிறுவனம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே உள்ளது. உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவராக ஃபேஸ்புக் சி.இ.ஓ மார்க் உள்ளார்.



 
 
இந்த நிலையில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் 35 முதல் 70 மில்லியன் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதாகவும், இந்த பணத்தின் மூலம் மருத்துவம், கல்வி உள்பட பொதுமக்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யவுள்ளதாக மார்க் தெரிவித்துள்ளார்
 
இதுகுறித்து தனது மனைவியிடம் தான் கலந்தாலோசித்தே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், உலக மக்களின் கல்வி, ஆரோக்கியம் ஆகியவற்றில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியதை தனது கடமைகளில் ஒன்றாக தான் பார்ப்பதாக மார்க் கூறியுள்ளார். மார்க்கின் இந்த முடிவுக்கு உலகெங்கிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்