சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

Webdunia
புதன், 16 நவம்பர் 2022 (07:30 IST)
சென்னையில் கடந்த ஆறு மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று பெட்ரோல் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்றும் நேற்றைய விலையிலேயே விற்பனை ஆகும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனை அடுத்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 என்றும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ஆறு மாதங்களாக மாற்றம் இல்லை என்றாலும் விரைவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
 
இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்