பீட்டாவின் தலைமை செயலகம் முற்றுகை: வலுக்கும் எதிர்ப்புகள்!!

திங்கள், 23 ஜனவரி 2017 (12:00 IST)
பீட்டாவின் தலைமையிடம் அமைந்துள்ள வர்ஜீனியா மாநிலம் நார்ஃபோல்க் நகரில் பெரும் திரளாக தமிழர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.


 

 
 
தமிழகத்தின் பாரம்பர்ய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தும் போராட்டம் தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் உலகத் தமிழர்களால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. 
 
அதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்களால் பீட்டா தலைமையகம் முன்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பீட்டாவின் தலைமை அலுவகத்திற்கு எதிரே திரண்டு, பீட்டாவின் இந்திய கிளையை மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
 
பீட்டாவின் தலைமை அலுவலகம் முன்பு குவிந்த அமெரிக்காவின் பதினாறு மாகாணங்களைச் சேர்ந்த தமிழர்கள் கறுப்புக்கொடி காட்டி, பீட்டாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி வருகின்றனர். 
 
வர்ஜீனியா, மேரிலாண்ட், டெலவர், கனக்டிக்கட்,மசசூசட்ஸ், பென்சில்வேனியா, நியூயார்க், நியூ ஜெர்ஸி உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள், வடக்கு கரோலைனா, ஜார்ஜியா, மிஷிகன், ஒஹயோ போன்ற மாநிலங்களிலிருந்தும் தமிழர்கள் போராடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்