ஓடும் விமானத்தில் ஏற முயன்ற பயணி

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (16:17 IST)
ஸ்பெயின் நாட்டில் பயணி ஒருவர் ஓடும் விமனத்தில் ஏற முயற்சித்துள்ளார். 


 

 
பொலிவியா நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மாட்ரிட் நகரில் இருந்து கிரான் கெனேரியா என்ற பகுதிக்கு விமானத்தில் செல்ல டிக்கெட் பெற்றுள்ளார்.
 
விமான நிலையத்திற்கு உரிய நேரத்தில் செல்லாமல், சற்று தாமதமாக சென்றதால் விமானம் புறப்பட்டு விட்டது. அதை பார்த்த பயணி, குகை பாதை வழியாக கீழே குதித்து விமானத்தை நோக்கி ஓடினார்.
 
விமானம் ஓடுகளத்தில் இருந்த ஊழியர்கள் அவரை மடக்கி பிடித்து, பயங்கரவாதி என்ற அச்சத்தில் விசாரித்துள்ளனர். அந்த பயணி, தான் விமானத்தில் பயணம் செய்யவதற்காக, மிஸ் செய்த விமானத்தை பிடிக்க ஓடினேன் என்று கூறியுள்ளார்.
 
இதையடுத்து விமான பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதால் அந்த பயணிக்கு ரூ.25 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்   
அடுத்த கட்டுரையில்