அருணாச்சல் பிரதேச மாநிலத்தில் ஆட்சி அமைக்க 31 இடங்கள் தேவைப்படும் நிலையில், 40 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. ஏற்கனவே இம்மாநிலத்தில் 10 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சிக்கிம் மாநிலத்தில் ஆட்சி அமைக்க 17 இடங்கள் தேவைப்படும் நிலையில், 31 தொகுதிகளில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா என்ற கட்சி முன்னிலை வகிக்கிறது. எனவே சிக்கிம் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா பிடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.