கன்சாஸ் என்ற பகுதியில் இருந்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஏர்லைன்ஸ் விமானம் இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு வாஷிங்டன் விமான நிலையத்திற்கு வந்தது. அதில் 60 பயணிகள் மற்றும் நான்கு விமான ஊழியர்கள் பயணம் செய்த நிலையில் இந்த விமானம் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்த போது திடீரென ராணுவ பயிற்சி ஹெலிகாப்டரில் மோதியது.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் மூன்று பேர் இருந்ததாக கூறப்படும் நிலையில் 3 பேர்களை நிலை என்ன என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. பயணிகள் விமானத்தை ஓட்டிய விமானி, கட்டுப்பாட்டு அறையில் அனுமதி பெற்ற பின்னர் தான் தரை இறக்கியதாகவும் ஆனால் திடீரென தரையிறங்குவதற்கு 30 நொடிகளுக்கு முன்பு அங்கு ஹெலிகாப்டர் குறுக்கே வந்ததால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.