மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண ஜனவரி 16ஆம் தேதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தனது மகனுடன் வந்திருந்தார். பின்னர் அவர் மதுரை விமான நிலையத்திற்கு காரில் சென்ற போது அவருடைய காருக்கு பின்னால் அமைச்சர்களின் கார்களும் சென்றன.
அதில் அமைச்சர் மூர்த்திக்கு சொந்தமான கார் எதிர்பாராத விதமாக எதிரே வந்த டூவீலரில் மோதியதில், டூவீலரில் வந்த ராஜேந்திரன் என்ற 60 வயது முதியவர் பலத்த காயமடைந்தார். இதனை அடுத்து அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.