இதில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக ஏழு பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் 40 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் பலியான ஏழு பேரின் குடும்பத்தினருக்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக உயர் ரக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.