முன்னாள் பிரதமர் 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை: தேர்தல் ஆணையம் உத்தரவு

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2022 (18:36 IST)
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஐந்து ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை என பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்த இம்ரான் கான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில் தற்போது அவர் மீது புதிய குற்றச்சாட்டு எழுந்து உள்ளது
 
அந்த குற்றச்சாட்டில் வெளிநாட்டு நபர்களிடமிருந்து பெறப்பட்ட பரிசுப் பொருட்களை விதிகளை மீறி அவர் விற்பனை செய்ததாக கூறப்பட்டது. இதனை அடுத்து இந்த புகார் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது
 
இதன் காரணமாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஐந்து ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்