ஆபாசப் படங்களில் நடிக்கும் ஜானி சின்ஸ் போட்டோவை போட்டு காஷ்மீரில் அடிப்பட்டவர் என்று போலி ட்வீட் போட்ட முன்னாள் பாகிஸ்தான் தூதரை நெட்டிசன்கள் வலுவாய் கலாய்த்துள்ளனர்.
ஆபாச திரைப்படங்களில் நடித்து உலக அளவில் பிரபலம் ஆனவர் ஜானி சின்ஸ். அவ்வப்போது இவர் மருத்துவர், நோயாளி, பீட்சா டெலிவரி பாய் கெட் அப்களில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஏதாவது போலியான செய்தியை எழுதி எங்கு பார்த்தாலும் பரப்புவார்கள் சிலர். பலர் அதை உண்மை என்று நம்பி விடுவதும் உண்டு. அப்படித்தான் வந்து வழிய சிக்கியிருக்கிறார் பாகிஸ்தான் முன்னாள் தூதர் அப்துல் பாசித்.
அப்துல் பாசித் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக பணியாற்றியவர். ஜானி சின்ஸ் மருத்துவமனையில் உயிருக்கு போராடியபடி பெண் மருத்துவர் ஒருவரிடம் காப்பாற்றும்படி கதறுவது போல் ஒரு புகைப்படத்தை அமர் என்பவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
அதில் புகைப்படத்தில் இருப்பவர் காஷ்மீர் பகுதியில் உள்ள அனந்தநாகை சேர்ந்த யூசுப் என்றும், கலவரத்தில் கல்லால் அடித்ததால் பார்வை போய்விட்டதாகவும் கூறி இவருக்காக குரல் கொடுங்கள் என பதிவிட்டுள்ளார். அதன் உண்மை தன்மை பற்றி யோசிக்காமல் இந்தியா மீதுள்ள வெறுப்பில் அப்படியே ரீ ட்வீட் செய்துள்ளார் அப்துல் பாசித்.
இதைக்கண்ட இணையவாசிகள் அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து இணையத்தில் உலாவ விட, அது உலகளவில் ட்ரெண்ட் ஆனது. சில ஆங்கில ஊடகங்களும் இதுகுறித்து செய்தி வெளியிட்டன. ஆபாச பட தயாரிப்பு நிறுவனமொன்றின் ட்விட்டர் பக்கத்தில் “ஜானிக்காக வேண்டிக்கொள்ளுவோம்” என்ற வாசகத்துடன் அதை பதிவிட்டிருக்கிறார்கள்.
அது உலகம் முழுக்கவும் ட்ரெண்ட் ஆக அதற்கு பதிலளிக்கும் வகையில் ஜானி சின்ஸ் தனது ட்விட்டரில் ”தங்கள் குரல் கொடுத்தமைக்கு நன்றி. என் பார்வை நன்றாகவே இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார். இப்படியாக பல இடங்களில் பங்கமாய் கேலி கிண்டலுக்கு உள்ளான பிறகே உணமை தெரிய வர, உடனே அந்த பதிவை நீக்கி உள்ளார் அப்துல் பாசித்.
Shout out to @abasitpak1 for all the new twitter followers! Thanks but my vision is fine