பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் 1,000-க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கூடுதலாக, கூட்டத்தை கண்காணிக்க ட்ரோன் கருவிகளும் பயன்படுத்தப்பட்டன.
இந்நிலையில், சனிக்கிழமை காலை, பக்தர்கள் ஒன்று சேரும் இடத்தில், ஒரு சரிவான பகுதியில் திடீரென கூட்டம் கட்டுப்பாட்டை இழந்து நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கிய 6 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பக்தி, உற்சாகத்துடன் தொடங்கிய விழா, துயரத்தில் முடிவடைந்த நிலையில், அந்த கிராமம் மற்றும் சுற்றுப்புறங்களில் பெரும் சோக நிலை நிலவுகிறது. அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததா என்ற கோணத்திலும் விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.