ஆப்கானிஸ்தான் மீது திடீரென பாகிஸ்தான் ராணுவம் விமானங்கள் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் இருந்து கொண்டு தெக்ரீக்-இ-தலிபான் என்ற அமைப்பு பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திவரும் நிலையில், ஆப்கானிஸ்தானில் ஆளும் அரசு இதற்கு ஆதரவளித்து வருவதாக பாகிஸ்தான் ஏற்கனவே குற்றம் சாட்டியுள்ளது.
பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானங்கள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்ததாகவும், இவர்களில் ஐந்து பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
மேலும் பலர் படுகாயம் அடைந்த நிலையில், சிலர் காணாமல் போனதாகவும், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.