நரம்பியல் பிரச்சனையை இழுத்துவிட்ட கொரோனா தடுப்பூசி..?

வியாழன், 10 செப்டம்பர் 2020 (12:29 IST)
ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனை அடுத்த வாரத்திற்குள் மீண்டும் துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனிகாவுடன் இணைந்து லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் பல்வேறுகட்ட ஆய்வுக்குப் பிறகு கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்தை மனிதர்களுக்கு செலுத்தும் முறையில் முதல் 2 கட்டம் வெற்றி பெற்றதையடுத்து 3 ஆம் கட்ட பரிசோதனையை நடத்தப்பட்டது. 
 
ஆனால், 3 ஆம் கட்ட பரிசோதனையில் தன்னார்வலர் ஒருவருக்கு எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டதால் சோதனை கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இது குறித்து அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் பேசியுள்ளது. 
 
அதில், அந்த தன்னர்வலருக்கு நரம்பியல் தொடர்பான பிரச்சனை ஏற்பட்டு குணமடைந்து வருவதாகவும் விரைவில் அவர் வீடு திரும்புவார் எனவு,ம் குறிப்பிட்டுள்ளது. அதோடு தடுப்பூசி சோதனை அடுத்த வாரத்திற்குள் மீண்டும் துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்