வெனிசுலாவில் 2 மாதங்களாக தொடரும் போராட்டம். 60 பேர் பலி, 3000 பேர் கைது

Webdunia
வியாழன், 1 ஜூன் 2017 (07:34 IST)
வெனிசுலா நாட்டில், அதிபர் நிக்கோலஸ் மடுராவின் ஆட்சிக்கு எதிராக ஆரம்பமான போராட்டம் உள்நாட்டுக் கலவரமாக மாறி கடந்த 2 மாதங்களாக நடந்து வருகின்றன. இதுவரை இந்த கலவரத்தில் பல அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், சுமார் 3000 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவ்லகள் வெளிவந்துள்ளது.



 


அதிபர் நிக்கோலஸ் பதவி விலக வேண்டும் என்றும், புதிய அதிபரை தேர்வு செய்ய தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றது. இதையடுத்து, வெனிசுலாவில் நாள்தோறும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

mother of all marches' என்று அழைக்கப்படும் இந்த தொடர் போராட்டத்தில் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் பேர் இறந்துள்ளதாகவும், அவர்களில் இருவர் காவல்துறையினர்களால் சுட்டு கொல்லப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம், உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் அரசு தரப்பில் இதுகுறித்து கூறியபோது இதுவரை இறந்தவர்கள் அனைவரும் போராட்டத்தின் வன்முறையின்போதும், இடிபாடுகளுக்கு இடையிலும் சிக்கி இறந்தவர்கள்தான் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் அதிபர் நிக்கோலஸ் மடுரா ஒரு சர்வாதிகாரிபோல் ஆட்சி செய்து வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்