ChatGPT உடன் இனி பேசலாம்: ஓபன்AI அறிமுகம் செய்துள்ள புதிய அம்சம்..!

Webdunia
வியாழன், 28 செப்டம்பர் 2023 (15:47 IST)
உலகம் முழுவதும் ChatGPT உள்பட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
 
ஓபன் ஏஐ நிறுவனம் அறிமுகப்படுத்திய ChatGPT தொழில்நுட்ப உலகில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. கூகுள் நிறுவனமும் பர்ட் என்ற பெயரில் ஏஐ தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது.

இதனால் வரும் காலத்தில் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தில் நிறைய புதிய அம்சங்கள் வர வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக ChatGPT உடன் இனி பேசலாம் என ஓபன்AI நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
செயற்கை நுண்ணறிவு சாட் போட்டான ChatGPT உடன் பயனர்கள் பேசும் வகையில் புதிய அம்சத்தை ஓபன்AI  அறிமுகம் செய்துள்ளது.  
 
இந்த புதிய அம்சம் மூலம் பயனர்கள் மற்றும் ChatGPT இடையே குரல் வழியில் உரையாடல் மேற்கொள்ள உதவும் என்று கூறப்படுகிறது.
 
இந்த புதிய அம்சம் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்