இந்திய மொழிகளில் இலவச ஆன்லைன் செயற்கை நுண்ணறிவுத் திறன் பயிற்சி..!

ஞாயிறு, 16 ஜூலை 2023 (09:00 IST)
இந்திய மொழிகளில் இலவசமாக ஆன்லைன் மூலம் செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி நேற்று முதல் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 
 
மத்திய அரசின் இந்த முயற்சியால் 9 இந்திய மொழிகளில் சேர்க்கை நுண்ணறிவு குறித்த பயிற்சியை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தொழில்நுட்ப ஆர்வமுள்ள நாடுகளில் ஒன்றாகிய இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை பெரும்பாலும் ஏற்றுக்கொண்ட நிலையில் அடுத்த கட்டமாக செயற்கை நுண்ணறிவுத் திறன் பயிற்சியை பெற்றுக்கொள்ள பலர் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். 
 
இதனை அடுத்து உலக இளைஞர் தினத்தை ஒட்டி மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் இந்திய மொழிகளில் இலவச ஆன்லைன் செயற்கை நுண்ணறிவுத் திறன் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் 9 இந்திய மொழிகளில்  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்