அபாய கட்டத்தை எட்டிய ஒமிக்ரான் பரவல் - WHO எச்சரிக்கை!

புதன், 29 டிசம்பர் 2021 (11:02 IST)
மாறுபாடடைந்த ஒமிக்ரான் தொற்று பரவல் வேகம் அபாய கட்டத்தை எட்டியுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

 
தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவியுள்ள ஒமிக்ரான் வேரியண்ட் உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. கடந்த சில நாட்களாக ஒமிக்ரான் பாதிப்பு பரவி வருகிறது என்பதும் படிப்படியாக பரவிய இந்த ஒமிக்ரான் வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. 
 
குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டனில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டிய வண்ணம் உள்ளது. இந்நிலையில் மாறுபாடு அடைந்த ஒமைக்ரான் தொற்று பரவல் வேகம் அபாய கட்டத்தை எட்டியுள்ளது. டெல்டா வைரசை விட ஒமைக்ரான் பரவல் விகிதம் பல்வேறு நாடுகளில் அதிகரித்துள்ளது என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்