இந்நிலையில் கொரோனா குறித்து பேசியுள்ள மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “கொரோனா தொற்று இந்தியா முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் சென்னையிலும் அதிகரித்துள்ளது. சென்னை அசோக் நகரின் எல்.ஜி.ஜிஎஸ் காலணி பகுதியில் சிலருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். 17வது தடுப்பூசி முகாம் புத்தாண்டிற்கு அடுத்த நாள் நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.