அமெரிக்காவில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அதிபர் ஒபாமா, அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக உள்ள யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவின் புதிய அதிபாராக டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அதிபராக உள்ள ஒபாமா வரும் 20ஆம் தேதி பதிவியில் இருந்து விலகுகிறார். இந்நிலையில் சிகாகோவில் நடைபெற்ற பிரியாவிடை நிகழ்ச்சியில் ஒபாமா உரை ஆற்றினார். அதில் அவர் கூறியதாவது:-
8 ஆண்டுகளில் எந்த பயங்கரவாத தாக்குதலும் அமெரிக்காவில் நடைபெறவில்லை. ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் முற்றிலும் அழிக்கப்படும். அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக உள்ள யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது, என்று கூறினார்.
வடகொரியா சில ஆண்டுகாலமாக தொடர்ந்து நவீன ஆயுதங்களை சோதனை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. வடகொரியாவின் அதிபர் உலகின் அச்சுறுத்தலான நபர்களில் ஒருவராக கருதப்படுகிறார். வடகொரியா அதன் ஆயுதங்களை கொண்டு அமெரிக்காவை தாக்க தயராகி கொண்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இதையடுத்து வடகொரியாவை கண்டு அமெரிக்கா சற்று பயத்தில் உள்ளது. அதன் வெளிபாடே அதிபர் ஒபாமா பேச்சில் வெளிவந்துள்ளது.