இன்று அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க உள்ள நிலையில் அதிபர் ட்ரம்ப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபராக பதவியேற்றது முதலாக தான் பல போர்களை நிறுத்தியுள்ளதாக தொடர்ந்து பேசி வரும் ட்ரம்ப் தனக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என கூறி வருகிறார். பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளும் அமைதிக்கான நோபலுக்கு ட்ரம்ப்பை சிபாரிசு செய்துள்ளன.
இன்று மதியம் உலக அமைதிக்கான நோபல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அது ட்ரம்ப்க்கு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்நிலையில் நோபல் குறித்து பேசிய ட்ரம்ப் “நான் 8 போர்களை நிறுத்திவிட்டேன். இதற்கு முன்பு இதுபோன்று நடந்ததில்லை. அவர்கள் என்ன செய்தாலும் பரவாயில்லை. நான் விருதுக்காக அதை செய்யவில்லை. முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு நோபல் பரிசு கொடுத்தார். ஆனால் அவர் இந்த நாட்டை அழித்ததை தவிர ஒன்றும் செய்யவில்லை. அவர் ஒரு நல்ல அதிபர் இல்லை” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K