அமெரிக்காவில் எச்-1பி விசா திட்டத்தில் பெரும் மாற்றங்களை கொண்டுவர டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஆரம்பத்தில் கட்டணத்தை $100,000 ஆக உயர்த்துவது குறித்த செய்திகளுக்கு பிறகு, தற்போது விசா பயன்பாடு மற்றும் தகுதிகள் மீதான கூடுதல் குடியேற்ற கட்டுப்பாடுகளை விதிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை முன்மொழிந்துள்ளது.
இந்தச் சீர்திருத்தங்கள், திட்டத்தின் ஒருமைப்பாட்டை மேம்படுத்தவும், அமெரிக்க தொழிலாளர்களின் ஊதியங்களை பாதுகாக்கவும் நோக்கம் கொண்டுள்ளன.
எச்-1பி விசா, அதிகத் திறன் கொண்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு அமெரிக்காவில் நீண்ட கால பணிக்கு இன்றியமையாதது. 2023-ல் அங்கீகரிக்கப்பட்ட விசாக்களில் கிட்டத்தட்ட முக்கால்வாசி பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.