கால்வலி என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி.. தண்ணீர் தொட்டியில் பிணமாக இருந்ததால் பரபரப்பு..!

Mahendran

வெள்ளி, 10 அக்டோபர் 2025 (11:02 IST)
உத்தரப் பிரதேசத்தின் தியோரியா மகரிஷி தேவராஹா பாபா மருத்துவ கல்லூரியில், மகாராஷ்டிராவை சேர்ந்த அசோக் காவாண்டே என்ற 61 வயது நோயாளி கால்வலி என அனுமதிக்கப்பட்ட நிலையில் தண்ணீர் டேங்கில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
செப்டம்பர் 27 அன்று காலில் காயத்துடன் அனுமதிக்கப்பட்ட காவாண்டே, சில நாட்களில் காணாமல் போனார். அக்டோபர் 6 அன்று, மருத்துவமனை குடிநீரில் துர்நாற்றம் வீசியதால், ஐந்தாவது தளத்தில் உள்ள குடிநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது, அவரது சடலம் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது. காவாண்டே மனநல கோளாறுக்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும், அவரது மனநிலை நிலையாக இல்லை என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
 
மாவட்ட ஆட்சியர் ஆய்வில், ஐந்தாவது தளத்தில் கதவு பூட்டப்படாமல் இருந்ததும், சிசிடிவி கேமராக்கள் இல்லாததும் உள்ளிட்ட பாதுகாப்பு குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனையடுத்து, மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் ராஜேஷ் பர்ன்வால் உடனடியாக பதவியிலிருந்து நீக்கப்பட்டு, லக்னோவுக்கு மாற்றப்பட்டார்.
 
காணாமல் போன நோயாளி எப்படி குடிநீர் தொட்டிக்குள் இறந்தார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்