கூகுளில் தன்னை தேடிய அதிகாரிக்கு மரண தண்டனை: வடகொரிய அதிபரின் கொடூர தண்டனை!

Webdunia
புதன், 15 மார்ச் 2023 (15:46 IST)
கூகுளில் தன்னை தேடிய அதிகாரிக்கு மரண தண்டனை விதித்த வடகொரிய அதிபர் தண்டனை விதித்திருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வடகொரிய அதிபர் கிம்ஜான் அந்நாட்டில் சர்வாதிகார ஆட்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. அந்நாட்டில் பல மர்மமான விஷயங்கள் நடப்பதாகவும் வெளி உலக தொடர்பே இல்லாமல் அந்நாட்டின் மக்கள் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் வடகொரியா நாட்டின் உளவு அமைப்பை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூகுள் இணையதளத்தில் அதிபர் கிம்ஜாங் உன்  குறித்த தகவல்களை தேடி உள்ளார். இதை கண்டுபிடித்துவிட்டகிம்ஜாங் உன் அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொள்ள அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
உலகம் முழுவதும் மரண தண்டனைக்கு எதிராக பல நாடுகள் குரல் கொடுத்து வரும் நிலையில் தன்னை பற்றி கூகுளில் தேடிய ஒரு சிறிய விஷயத்துக்கு மரண தண்டனை விதித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்