எதிர்ப்புகள் வலுத்தாலும் சோதனையை கைவிடாத வடகொரியா!!

Webdunia
சனி, 10 ஜூன் 2017 (10:56 IST)
வடகொரியாவின் புதிய ஏவுகணை போர்க்கப்பலை அழிக்க கூடிய திறன் கொண்டுள்ளது என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.


 
 
உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், ஏவுகணை சோதனைகளை நடத்தி வரும் வடகொரியா சமீபத்தில் புதிய ஏவுகணை பரிசோதனையை நடத்தியது.
 
இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிந்ததாக வடகொரிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. சோதனையின் போது, கொரியாவின் கிழக்கு கடல் பகுதியில் உள்ள குறிப்பிட்ட இலக்கை  தாக்கியது.
 
மேலும், இந்த போர்கப்பல் நடுக்கடலில் உள்ள எதிரிகளின் போர்க்கப்பலைக்கூட துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் படைத்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்