இயற்பியல் நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிப்பு.. செய்த சாதனை என்ன?

Siva
செவ்வாய், 8 அக்டோபர் 2024 (15:50 IST)
ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு துறையில் சிறந்த சாதனையாளர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. நேற்று வேதியியல் துறையில் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதை பற்றி ஏற்கனவே பார்த்தோம்.

இதனைத் தொடர்ந்து, இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு இருவருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் போன்ற துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

தற்போது இந்த ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. செயற்கை நரம்பியல் நெட்வொர்க் மூலம் இயந்திர கற்றலை செயல்படுத்தும் கண்டுபிடிப்புக்காக இந்த பரிசு ஜான் காபீல்ட் மற்றும் ஜெஃப்ரி ஹின்டன் ஆகியோருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருவருக்கும் 10 லட்சம் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 8 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்