நியூசிலாந்தை புரட்டி போட்ட ‘கேப்ரியல்’ புயல்! – அவசரநிலை பிரகடனம்!

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (09:07 IST)
நியூசிலாந்தில் கடுமையான கேப்ரியல் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. முக்கியமாக நியூஸிலாந்து வடக்கில் அமைந்துள்ள ஆக்லாந்து நகரில் அளவுக்கு அதிகமான மழை பெய்துள்ளதால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பெரும் வெள்ளத்தால் வீடுகள், பாலங்கள் கூட இடிந்து விழுந்த நிலையில் 4 பேர் பலியாகினர்.

இந்த வெள்ள பாதிப்பிலிருந்து ஆக்லாந்து மீளாத நிலையில் நேற்று சக்தி வாய்ந்த புயலான ‘கேப்ரியல்’ ஆக்லாந்து உள்ளிட்ட 5 பிராந்தியங்களை தாக்கியுள்ளது. சூறாவளி காற்றால் வீடுகள் மரங்கள் பிய்த்து எறியப்பட்டுள்ளன. மின்கம்பங்கள் அறுந்துள்ளது. இதனால் 46 ஆயிரம் வீடுகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய மீட்பு படையினர் முயற்சித்து வரும் நிலையில் பல பகுதிகளில் பெரும் வெள்ளத்தால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. புயல், மழையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்