வாட்ஸ் ஆப்பில் புதிய அப்டேட்...பயனர்கள் மகிழ்ச்சி

Webdunia
வெள்ளி, 26 மே 2023 (20:02 IST)
இன்றைய உலகில் சமூக வலைதளங்களின் பயன்பாடு  உலகமெங்கும் அதிகரித்துள்ளது.  இதில், வாட்ஸ் ஆப் ஒவ்வொருவரின் செல்போனிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பயனர்களின் தேவைக்கு ஏற்ப வாட்ஸ்ஆப்பில் பல புது அம்சங்களை வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது.

சமீபத்தில், டெலிகிராம் போன்று   ஜிபி பைல்களை அனுப்பும் வசதி மற்றும் குரூப் கால்கள், 2 டைப் வெரிபிகேசன், அனுப்பிய மெசேஜுகளை எடிட் செய்யும் வசதி  ஆகிய அம்சங்களை அறிமுகப்படுத்தியது. இதனால், பயனர்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், டிவிட்டர், இன்ஸ்டாகிராம்,ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களைப் போன்று  வாட்ஸ் ஆப் செயலியிலும் யூசர் நேம்(User name) அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகிறது.

இது பயனர்களின் தனியுரிமையை பாதுகாக்கும் வகையில்  இந்த அப்டேட் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்