2 கோடியை நெருங்கியது உலக கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (07:57 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியை நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
உலகம் முழுவதும் 1,92,37,886 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 7,16,530 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 12,346,089 பேர்  மீண்டனர் 
என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
அமெரிக்காவில் மட்டும் நேற்று ஒரே நாளில் 58,177 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அந்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 50.3 லட்சமாக அதிகரித்துள்ளது. மேலும் அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் மேலும் 1,179 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 1,62,780 ஆக அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது
 
அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் ஒரே நாளில் 54,801 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 29.17 லட்சமாக  ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 1,226 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 98,644 ஆக அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்